அந்தியூரில் ரூ.2.04 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-08-08 12:15 GMT

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது.இதில், 9,209 தேங்காய்கள், குறைந்தபட்ச விலையாக 5 ரூபாய் 50 பைசாவிற்கும், அதிகபட்ச விலையாக 14 ரூபாய் 39 பைசாவிற்கும்,37 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 62 ரூபாய் 22 பைசா முதல் 84 ரூபாய் 79 பைசாவிற்கும் விற்பனையானது.

மேலும், 5 மூட்டைகள் எள் கிலோ 75 ரூபாய் 09 பைசா முதல் 107 ரூபாய் 09 பைசா வரை விற்பனையானது.இன்றைய வர்த்தகத்தில், மொத்தம் 152.31 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் 2 லட்சத்து 03 ஆயிரத்து 619 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News