அந்தியூரில் ஆவணமின்றி கொண்டுச் சென்ற ரூ.3.02 லட்சம் பறிமுதல்

Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உரிய ஆவணமின்றி கொண்டுச் சென்ற ரூ.3,02,750 ரூபாயை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.;

Update: 2024-03-18 12:15 GMT

Erode news- ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்தியூர் தாசில்தார் கவியரசுவிடம் ஒப்படைத்தனர். அருகில், மண்டல துணை வட்டாட்சியர் ராஜசேகர், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சக்திவேல், மாதேஷ், சமூக நல தாசில்தார் சண்முகசுந்தரம் மற்றும் பலர் உள்ளனர்.

Erode news, Erode news today-  அந்தியூரில் உரிய ஆவணமின்றி கொண்டுச் சென்ற ரூ.3,02,750 ரூபாயை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம், படுவகாடு பிரிவு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ.1,02,750 இருந்தது தெரியவந்தது. பணத்தைக் கொண்டு வந்த நபர் அம்மாபேட்டை, பி.கே.புதூர், பகுதியைச் சேர்ந்த ராஜா என்பதும் இவர் வெங்காய வியாபாரம் செய்து வருவதும் தெரிய வந்தது.

வெங்காயத்தை விற்பனை செய்து விட்டு பணத்தை எடுத்துக்கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறககும் படையினர் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பணத்தை ஒப்படைத்தனர். தொடர்ந்து வெங்காய வியாபாரியிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

அதேபோல், அந்தியூர் பத்திரகாளியம்மன் கோவில் முன்பு தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வாரியாக வந்த ஆம்னி காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 லட்சம் ரூபாய் எடுத்துச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுக்கா, தெலுங்கனூர் பகுதியைச் சேர்ந்த பிரகதீஸ்வரன் (32) என்பது தெரியவந்தது.

இவர் கோபி பகுதிக்கு தனது உறவினர்களோடு கார் எடுக்க பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. இருப்பினும் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் , வட்டாசியருமான கவியரசுவிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News