ஈரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரோட்டில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கடரமணி தலைமையில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.;

Update: 2023-08-26 14:15 GMT

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோட்டில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கடரமணி தலைமையில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ஈரோடு கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பி.வெங்கடரமணி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில், ஈரோடு மாவட்டத்தில் மாநில மற்றும் இதர சாலை ஓட்டுநர்களுக்கு ஈரோடு மாவட்டம் சோலார் பேருந்து நிலையம் அருகில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில், சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். இதில் பயணத்தின் போது சீருடை மற்றும் இருக்கைப் பட்டை அணிவது, கைப்பேசி பேசிக்கொண்டு வாகனம் இயக்கக் கூடாது. அதிக பயணிகள் மற்றும் அதிக பாரம் ஏற்றக்கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் இயக்கக்ஸகூடாது. போதிய ஓய்வு மற்றும் தூக்கமின்மையால் வாகனம் இயக்கக் கூடாது. சாலையை பாதுகாப்பான முறையில் விபத்தில்லாமல் வாகனம் இயக்க என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News