அந்தியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம்

அந்தியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது

Update: 2022-08-31 06:32 GMT

அந்தியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில் ரவுண்டானா அருகில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம்  நடைபெற்றது.

அந்தியூர் வட்ட குழு செயலாளர் தேவராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியலில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய மின்சார சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.


மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர் பா. பா. மோகன் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News