பெருந்துறை அருகே ஆலையில் பதுக்கிய 20 ஆயிரத்து 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: பெருந்துறை அருகே 5 பேர் கும்பல் கைது

பெருந்துறை அருகேஅரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்ட, 20.850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனர்

Update: 2022-01-10 11:45 GMT

ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பெருந்துறை அருகே ஒரு அரிசி ஆலையில் 417 மூட்டைகளில், 20 ஆயிரத்து, 850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். பெருந்துறை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் வட மாநிலத்தவர்களுக்கு, அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கியதை உறுதி செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனன்  பிக் அப் வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக சேலம் மாவட்டம் வாழப்பாடி, நாட்டார்மங்களம் அக்ரஹார வீதி வெங்கடேஷ்‌ , தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், பத்ரஹள்ளி, பூச்சூர் அஜீத்குமார்,பென்னாகரம், செல்லம்பூண்டி தாசனூர் பூபாலன் ,பென்னாகரம், பூச்சூர், ஆரல்குந்தி சின்னதம்பி,பெருந்துறை, வாவிகடை, பிச்சாண்டாம்பாளையம் கணபதி நகர் சென்னியப்பன்,  ஆகியோரை கைது செய்தனர். ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள அரிசி ஆலை உரிமையாளரான, பவானியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News