ஈரோட்டில் வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

ஈரோடு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2024-02-13 12:15 GMT
ஈரோட்டில் வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

ஈரோடு வட்டாசியர் அலுவலகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற வருவாய்த்துறை அலுவலர்கள்.

  • whatsapp icon

ஈரோடு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணை உடனடியாக வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருந்த ஆணையினை உடனடியாக வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் தனி ஊதியம் வழங்க வேண்டும்.

இளநிலை உதவியாளர் தட்டச்சர் ஆகியோரின் ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்திட மனிதவள மேலாண்மை துறை மூலமாக உரிய தெளிவுரை வழங்கிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் கவிதா வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் குமரேசன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ரமேஷ் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், கோபிசெட்டிபாளையம், பவானி, அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு வருவாய் கோட்ட பகுதியில் பணியாற்றி வரும் வருவாய்த்துறை அலுவலர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News