பவானி அருகே 60 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு மீட்பு

Erode news- ஈரோடு மாவட்டம் பவானி அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.

Update: 2024-03-24 07:00 GMT

Erode news- கிணற்றில் விழுந்த பசுமாட்டை பவானி தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.

Erode news, Erode news today - பவானி அருகே 60 அடி கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூர் அய்யம்பாளையம் ரோட்டைச் சேர்ந்தவர் யுவராஜ். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் 60 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. அதில், 20 அடிக்கு தண்ணீர் இருந்த நிலையில், நேற்று ஜேசிபி இயந்திரத்தின் சத்தம் கேட்டு மிரண்ட பசுமாடு எதிர்பாராமல் கிணற்றுக்குள் விழுந்தது. தண்ணீரில் தத்தளித்தபடி கிடந்த மாட்டை மீட்க அப்பகுதியினர் முயன்றும் முடியவில்லை.


இதனால், பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் விரைந்த தீயணைப்பு படையினர் கிணற்றுக்குள் தவித்த மாட்டை கயிறு கட்டி மீட்டனர். பின்னர், பசு மாட்டை மீட்டு, முதலுதவி அளித்து பசுமாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். 60 அடி கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்ட பவானி தீயணைப்பு வீரர்கள் அப்பகுதி விவசாயிகள் பாராட்டினர்.

Tags:    

Similar News