ஆணவக்கொலை முயற்சி குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை
ஆணவக்கொலை முயற்சியில் தொடர்புடையவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
ஈரோட்டில் தலித் விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
சத்தியமங்கலம் ஆணவக்கொலை முயற்சியில் தொடர்புடையவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி தலித் விடுதலை இயக்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தலித் விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் மூக்நாயக் தலைமை வகித்தார்.
இப்பொதுக்குழு கூட்டத்தில், சத்தியமங்கலத்தில் மாற்று சமுதாய பெண்ணை காதல் திருமணம் செய்ததற்காக ஆணவக்கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதோடு சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்.
இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான சந்தேகம் மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் இணைத்து ஒப்புகை சீட்டு வழங்கி அதன் அடிப்படையில் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளை ஆதரிப்பது தொடர்பான முடிவுகளுக்கு பொதுச் செயலாளர் மாநில தலைவர்களின் முடிவுகளுக்கு கட்டுப்படுவது, அரசால் வழங்கப்படும் தாட்கோ கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இகூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மாவை சசிகுமார், மாநில பொருளாளர் கவிதா, ஈரோடு மாவட்ட தலைவர் பொன் சுந்தரம், மாநில தொழிலாளர் அணி செயலாளர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் குப்புசாமி மாநில அமைப்பாளர் முனியப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.