தூத்துக்குடி வெள்ள பாதிப்பு: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் நிவாரணப் பொருட்கள்
கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில், நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில், நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பலவேறு அமைப்புகள் நிவாரணப் உதவிகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில், ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி கோபிசெட்டிபாளையம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் பயாசுதீன், திமுக நெசவாளர் அணியின் மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், கோபி நகர்மன்ற தலைவர் நாகராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு 1000 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வாகனங்கள் மூலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், கோபி நகர தலைவர் ஆடிட்டர் சம்சுதீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சலீம் ராஜா, மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் ஜியா உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.