பாசனத்திற்காக குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
Kunderipallam Dam-ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று (திங்கட்கிழமை) தண்ணீர் திறக்கப்பட்டது.
Kunderipallam Dam-ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குன்றி மலையடிவாரத்தில் கடந்த 1980ம் ஆண்டு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது. குன்றி, விளாங்கோம்பை, மல்லியதுர்கம், கடம்பூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் பெய்யும் மழை நீர் பத்துக்கும் மேற்பட்ட காட்டாறுகள் வழியாக குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்தடைகிறது.
42 அடி உயரமுள்ள இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், குண்டேரிப்பள்ளம், வினோபா நகர், வாணிப்புத்தூர், மூலவாய்க்கால் உள்ளிட்ட 10க்கும் மேற் பட்ட கிராமங்களில் உள்ள 2,498 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டுதோறும் இரு போக பாசன வசதி பெற்று வருகிறது.
இந்நிலையில் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால், இந்த ஆண்டு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து இன்று (ஏப்.,10) குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரத்தனகிரி, குண்டேரிப்பள்ளம் அணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் குப்புராஜ், வாணிப்புத்தூர் பேரூர் கழக செயலாளர் சேகர், வாணிப்புத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் கதிர்வேல், பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள். பாசன சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு அணையில் இருந்து இடது மற்றும் வலது என இரு மதகுகளில் இருந்தும் தண்ணீர் திறந்து வைத்தனர்.
இன்று (ஏப்.,10) திங்கட்கிழமை முதல் 57 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாகவும், இரு வாய்க்கால்களிலும் வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2