கொடிவேரி அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
Erode news- ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கட்டில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கு இன்று (12ம் தேதி) தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.
Erode news, Erode news today- கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கட்டில் இருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கு இன்று (12ம் தேதி) தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.
2024-2025ம் ஆண்டு முதல் போக பாசனத்திற்கு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை வாய்க்காலில் உள்ள பாசன நிலங்களுக்கு இன்று (12ம் தேதி) முதல் நவம்பர் 8ம் தேதி வரை 120 நாட்களுக்கு 8,812.80 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, இன்று (12ம் தேதி) கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கட்டில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு கோபி கோட்டாட்சியர் கண்ணப்பன் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ் தண்ணீர் திறந்து வைத்தார்.
இதன், மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி வட்டத்திலுள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். வரும் நவம்பர் 8ம் தேதி வரை 120 நாட்களுக்கு 8812.80 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அணையின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் நவமணி கந்தசாமி, உதவி செயற்பொறியாளர் கல்பனா, கோபி வட்டாட்சியர் கார்த்திக், பேரூராட்சி தலைவர்கள் சிவராஜ், தமிழ்மகன்சிவா, தமிழ்செல்வி, வெற்றிவேல், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் சிவபாலன், கொடிவேரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி உட்பட கோபிசெட்டிபாளையம், வாணிப்புத்தூர் உதவி பொறியாளர்கள், பாசன விவசாய சங்க தலைவர்கள், விவசாய பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.