இளைய சமுதாயத்தினரிடையே, வாசிப்பு குறைந்து வருகிறது: கி.வீரமணி..!

இளைய சமுதாயத்தினரிடையே, வாசிப்பு குறைந்து வருகிறது. சமூக வலைதளங்களில் அவர்களின் தேடல் உள்ளது என்று என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

Update: 2024-10-27 12:15 GMT

ஆசனூரில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி பட்டறையில் எடுக்கப்பட்ட படம்.

இளைய சமுதாயத்தினரிடையே, வாசிப்பு குறைந்து வருகிறது. சமூக வலைதளங்களில் அவர்களின் தேடல் உள்ளது என்று என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூரில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை இரண்டு நாட்களாக நடை பெற்று வருகிறது.திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.

பின்னர் , அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆசனூரில் பெரியாரியல் பயிற்சி பட்டறை இரண்டு நாட்களாக நடை பெற்று வருகிறது. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். 


நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக  மாநாட்டில் அம்பேத்கர், பெரியார், படங்கள் வைத்துள்ளது குறித்து கேட்ட போது, விஜய் அவர் கொள்கையை சொல்லட்டும், பின்பற்றினால் வரவேற்க வேண்டிய விஷயம்.

இளைய சமுதாயத்தினரிடையே, வாசிப்பு குறைந்து வருகிறது.  சமூக வலைதளங்களில் அவர்களின் தேடல் உள்ளது. அடுத்த தலை முறைக்கு திராவிட கொள்கைகள், மற்றும் பெரியாரிய கருத்துகளை இன்றைய இளைஞர்களுக்கு எப்படி கொண்டு செல்வது என் கேட்ட போது, தற்போது நடை பெற்று கொண்டிருக்கும் பயிற்சி பட்டறையில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுவே மிக பெரிய சாட்சி.

இளைஞர்கள் அறிவை விசால மாக்க புரட்சி கவி சொன்ன படி, நூலை படி நூலை படி, என்பதற்கேற்ப புத்தகங்கள் குவிந்து கிடக்கிறது. உலகம் அறிவு வயப்பட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார். உடன் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சென்னியப்பன், செயலாளர் குணசேகரன், தலைமை கழக அமைப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் இருந்தனர்.

மேலும் இரண்டு நாள் பயிற்சியில் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர். பயிற்சி சத்தியமங்கலம், ஈரோடு, நம்பியூர், மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள், இளைஞர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News