கவுந்தப்பாடி அருகே ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது‌

கவுந்தப்பாடி அருகே, 30 மூட்டைகளில் 1,200 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-02-26 10:15 GMT
கவுந்தப்பாடி அருகே ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது‌

கைது செய்யப்பட்ட குமரேசன்

  • whatsapp icon

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள வைரமங்கலம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு வேனில், சோதனை செய்ததில் 40 கிலோ எடையுள்ள 30 மூட்டைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் பவானி எலவமலை பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் குமரேசனை கைது செய்து அவரிடம் இருந்து 1,200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News