ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் வரும் 19ம் தேதி ரேஷன் குறைதீர் முகாம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் வரும் 19ம் தேதி (சனிக்கிழமை) பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.;
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் வரும் 19ம் தேதி (சனிக்கிழமை) பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் 19ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து வட்டங்களிலும் தலா ஒரு இடத்தில் நடக்கிறது. இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் மாற்றம் மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் மூலம் புகார் அளிக்கலாம்.
அதன்படி ஈரோடு வட்டத்தில் சின்னமாரியம்மன் கோயில் வளாகம், பெருந்துறை வட்டத்தில் வள்ளிபரத்தான்பாளையம், மொடக்குறிச்சி வட்டத்தில் அவல்பூந்துறை ராசாம்பாளையம், கொடுமுடி வட்டத்தில் சோளக்காளிபாளையம், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் கடுக்கம்பாளையம், நம்பியூர் வட்டத்தில் சாந்திபாளையம், பவானி வட்டத்தில் சின்னபுலியூர், அந்தியூர் வட்டத்தில் எண்ணமங்கலம் -1, சத்தியமங்கலம் வட்டத்தில் பெரியூர் அரியப்பம்பாளையம், தாளவாடி வட்டத்தில் மல்லங்குழியிலும் முகாம் நடக்கிறது.
எனவே, மேற்கொண்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமினை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்த கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.