கோபிச்செட்டிப்பாளையம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கடத்தூர் ஊராட்சிக்குட்பட்ட எருமைக்காரன்பாளையத்தில் அரசூர் அருகே உள்ள பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பகுதி மக்கள் கடத்தூர்-அரசூர் செல்லும் சாலையில் காலிக் குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். குடிநீர் வினியோகிக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.