நாடாளுமன்றத் தேர்தல்: ஈரோட்டில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-17 03:45 GMT
ஒத்திவைப்பு (பைல் படம்).

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறை உடனடியாக அமலுக்கு வந்து விட்டது. எனவே ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- 

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறை கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஈரோடு  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் அனைத்து குறைதீர்க்கும் கூட்டங்களும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

எனவே,பொதுமக்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தின் தொலைபேசி 1077 மற்றும்  0424-2260211 ஆகிய எண்களில் தொடர்பு பதிவு செய்யலாம். மேலும், 97917 88852 என்ற வாட்ஸ்-அப் எண் மூலமாகவும் புகாரை அனுப்பி வைக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News