அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தண்ணீர் குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தண்ணீர் குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-11 10:45 GMT

இரண்டு தண்ணீர் குடங்களுடன் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தண்ணீர் குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஒட்டப்பாளையம் ஊராட்சி நல்லதம்பி காட்டுகொட்டாய் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நான்கு தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.

இதனிடையே, ஒட்டபாளையத்தில் இருந்து நல்லதம்பிகாட்டுகொட்டாய் செல்லும் வண்டிபாதையை சிலர் ஆக்கரமித்துள்ளனர். இதனை சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர், மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். ஆனால், இது சம்பந்தமாக யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், இன்று (11ம் தேதி) அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த நல்லதம்பிகாட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அந்தியூர் வட்டாட்சியர் கவியரசிடம் மீண்டும் ஒரு மனுவை அளித்தனர். அந்த மனுவை பெற்ற வட்டாட்சியர், இந்த இடத்தை வந்து சர்வே செய்து, அதன் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

ஆனால், பொதுமக்கள் நாங்கள் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், நடவடிக்கை எடுக்கும் வரை, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிக்கொண்டு, இரண்டு தண்ணீர் குடங்களுடன் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

Tags:    

Similar News