ஈரோட்டில் புகைப்பட கண்காட்சி தொடக்க விழாவில் 156 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
Erode news- ஈரோட்டில் நடைபெற்ற செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் தமிழக அரசின் இரண்டரை ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடக்க விழாவில் 156 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வியாழக்கிழமை (இன்று) வழங்கினார்.;
Erode news- அரசின் இரண்டரை ஆண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியில், பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையினை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். உடன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மேயர் நாகரத்தினம் ஆகியோர் உள்ளனர்.
Erode news, Erode news today- ஈரோட்டில் நடைபெற்ற செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் தமிழக அரசின் இரண்டரை ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடக்க விழாவில் 156 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வியாழக்கிழமை (இன்று) வழங்கினார்.
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் இரண்டரை ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடக்க விழா ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் முன்னிலை வகித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டு, 156 பயனாளிகளுக்கு ரூ.38.67 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, முதலமைச்சரால் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சியினால் நாள்தோறும் பல்வேறு திட்டங்கள் துவக்கப்படுகிறது. பல்வேறு முடிவுற்ற திட்டங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று நாள்தோறும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 156 பயனாளிகளுக்கு ரூ.38.67 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் தொடர்ச்சியாக பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 78 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.
விழாவில், மகளிர் திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மை- உழவர் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் பார்வையிட்டார். அமைக்கப்பட்டிருந்த கருத்துக் காட்சிகளை அவர் பார்வையிட்டார் . முன்னதாக, இசைப்பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 28 நபர்களுக்கு ரூ.26.88 லட்சம் மதிப்பீட்டில் பெட்ரோல் ஸ்கூட்டர், 10 நபர்களுக்கு ரூ.10.60 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, 5 நபர்களுக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பீட்டில் மூன்று சக்கர வண்டி, 5 நபர்களுக்கு ரூ.46 ஆயிரத்து 750 மதிப்பீட்டில் சிறப்பு சக்கர நாற்காலி, 5 நபர்களுக்கு ரூ.24 ஆயிரம் மதிப்பீட்டில் கார்னர் நாற்காலி, 5 நபர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 650 மதிப்பீட்டில் ஊன்றுகோல், 20 நபர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான ஆணைகள் மற்றும் 78 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை என 156 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 67 ஆயிரத்து 958 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், எடை குறைவான 10 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) கலைமாமணி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.