பெருந்துறையில் காசநோயால் பாதித்தோருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

பெருந்துறை அரசு மருத்துவமனையில் காசநோயால் பாதிக்கப்பட்ட 35 நபர்களுக்கு ஊட்டச்சத்து இன்று (30ம் தேதி) வழங்கப்பட்டது.

Update: 2024-08-30 11:30 GMT

பெருந்துறை சிப்காட் மரிகோ லிமிடெட் நிறுவனத்தினர் நுண்ணோக்கிகளை ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் (மருத்துவ பணிகள் காசநோய்) ராமச்சந்திரனிடம் வழங்கினர்.

பெருந்துறை அரசு மருத்துவமனையில் காசநோயால் பாதிக்கப்பட்ட 35 நபர்களுக்கு ஊட்டச்சத்து இன்று (30ம் தேதி) வழங்கப்பட்டது. 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் காசநோய் ஒழிப்புத் திட்ட பயன்பாட்டிற்கு நுண்ணோக்கிகள் (மைக்ரோஸ்கோப்) மற்றும் நலிவடைந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (காசநோய்) மரு.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

இதில், பெருந்துறை சிப்காட் மரிகோ லிமிடெட் நிறுவனத்தார் கலந்து கொண்டு நலிவடைந்த காச நோயினால் பாதிக்கப்பட்ட 35 நபர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினர். தொடர்ந்து, ஈரோடு மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்ட பயன்பாட்டிற்கு இரண்டு நுண்ணோக்கிகளை ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் மரு.ராமசந்திரனிடம் (மருத்துவ பணிகள் காசநோய்) வழங்கினர்.


ந்த நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் (மருத்துவ பணிகள் காசநோய்) மரு.ராமச்சந்திரன் பெருந்துறை சிப்காட் மரிகோ லிமிடெட் நிறுவனத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பெருந்துறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காந்திமதி, மரிகோ லிமிடெட் நிறுவன மேலாளர்கள், அலுவலர்கள், ஈரோடு காசநோய் மைய ஒருங்கிணைப்பாளர் சர்மா, பெருந்துறை காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சுரேஷ், அரசு மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News