அவல்பூந்துறை அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.;

Update: 2023-09-12 12:45 GMT

அவல்பூந்துறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.

கடந்தாண்டு பிளஸ் 1 படித்து தேர்ச்சி பெற்று, தற்போது பிளஸ் 2 படித்து வரும் மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம் அவல்பூந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (இன்று) நடந்தது.


இதில், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளரும் அவல்பூந்துறை பேரூராட்சி முன்னாள் தலைவருமான குணசேகரன், தலைமை வகித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

இதில் அவல்பூந்துறை பேரூராட்சி துணை தலைவர் சோமசுந்தரம், வார்டு கவுன்சிலர்கள் தங்கவேல், துரை, நந்தகுமார், அவல்பூந்துறை பேரூர் திமுக செயலாளர் சண்முகசுந்தரம், கட்சி நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், மூர்த்தி, தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News