ஈரோட்டில் அக்.19ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Erode news- ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோட்டில் வரும் அக்டோபர் 19ம் தேதி நடக்கிறது.;

Update: 2024-10-05 02:30 GMT

Erode news-ஈரோட்டில் வேலைவாய்ப்பு முகாம் (பைல் படம்).

Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ஈரோட்டில் வரும் அக்டோபர் 19ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தலைமையேற்று பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலை அளிப்பவர்கள் கலந்துகொண்டு 10,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 

இந்த முகாமில், 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் அனைத்து படிப்பு முடித்தோர், கணினி இயக்குவோர், ஓட்டுநர், செவிலியர், மருந்தாளுநர் என அனைத்து வேலை தேடுபவர்களும் பங்கேற்கலாம். இம்முகாமில் கலந்துகொள்ள முன்பதிவு கட்டாயமானதாகும்.

முன்பதிவு செய்ய https://forms.gle/dNSiFvdKSmMAFRx3A என்ற லிங்க்கை கிளிக் செய்து பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ, 0424-2275860, 9499055942 என்ற எண்களில் அல்லது employment_erode என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News