ஈரோட்டில் நாளை (6ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
Erode News- ஈரோட்டில் நாளை (6ம் தேதி) வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.;
- ERODE POWER SHUTDOWN
Erode News, Erode News Today - ஈரோட்டில் நாளை (6ம் தேதி) வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆட்சியர் அலுவலக மின்பாதையில் நெடுஞ்சாலை துறை சார்பில் பராமரிப்பு பணி நாளை (6ம் தேதி) வெள்ளிக்கிழமை நடக்கிறது.
இதனால், கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம். தெரிவித்துள்ளார்.
எனவே, மின்தேவை இருப்பின் பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆட்சியர் அலுவலக மின்பாதை:-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ஈரோடு குமலன்குட்டை பேருந்து நிறுத்தம், பாலக்காடு, பெருந்துறை ரோடு, வி.ஐ.பி. காலனி, திரு.வி.க.வீதி, ராணாலட்சுமணன் நகர் மற்றும் ஆசிரியர் காலனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.