ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் கனி வணிகர்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழா

ஈரோட்டில் நேதாஜி தினசரி மார்க்கெட் கனி வணிகர்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழா திங்கட்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது.;

Update: 2024-01-15 08:45 GMT

ஈரோட்டில் நேதாஜி தினசரி மார்க்கெட் கனி வணிகர்கள் சங்கம் சார்பில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ஈரோட்டில் நேதாஜி தினசரி மார்க்கெட் கனி வணிகர்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழா திங்கட்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது.

ஈரோடு வ.உ.சி. பூங்கா அருகே தற்காலிகமாக செயல்படும் நேதாஜி தினசரி மார்க்கெட் வளாகத்தில், ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் கனி வணிகர்கள் சங்கம் சார்பில், தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. 


விழாவிற்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்டத் தலைவரும், சங்கத் தலைவருமான சண்முகவேல் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பேரமைப்பின் மாவட்டச் செயலாளர் இராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் செயலாளர் லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் பாலகிருஷ்ணன், தமிழரசன், மாநகர செயலாளர் பாலமுருகன், மாநகர பொருளாளர் சாதிக் பாட்சா ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் வழங்கினர்.


சங்கச் செயலாளர் சாதிக் பாட்சா, பொருளாளர் மணி, துணைத்தலைவர் பரசுராம், துணைச் செயலாளர் கார்த்தி ஆகியோர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நடைபெற்ற விழாவில் வணிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர்  பொங்கல் உண்டு மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News