சென்னிமலை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த சுல்லிமேடு-விஜயமங்கலம் ரோடு வாய்ப்பாடி பஸ் நிறுத்தம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக 3 டிப்பர் லாரிகள் கிராவல் மண் ஏற்றி கொண்டு வந்தது. அப்போது லாரிகளையும் நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த லாரி முழுவதும் அளவுக்கு அதிகமாக கிராவல் மண் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் குறித்து விசாரித்த போது லாரியை ஓட்டி வந்தது ஈங்கூரை சேர்ந்த சரவணன் (வயது 28), சேலம் மாவட்டம், கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (வயது 30), கருப்பசாமி (வயது 27) ஆகியோர் என தெரியவந்தது. அவர்களிடம் மணல் கொண்டு வந்ததற்கான ஆவணங்கள் காட்டுமாறு போலீசார் கூறினார். அப்போது அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து 3 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.