ஈரோடு: பவானி ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தின் தலை, கை, கால் மீட்பு

கவுந்தப்பாடி அருகே பவானி ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தின் தலை, கை, கால் என‌ உடல் பாகங்கள் தனித்தனியாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை.

Update: 2023-03-27 11:45 GMT

பவானி ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தின் தலை, கை, கால் மீட்பு

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி காவல் நிலையத்திற்குட்பட்ட பெருந்தலையூர் அருகே செரையாம்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் சிலர் குளிப்பதற்காக சென்றனர். அப்போது ஆற்றில் தலை, கை, கால் இல்லாத நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து வருவது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கவுந்தப்பாடி போலீசார் ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தலை,கை, முழங்கால் வரை வெட்டப்பட்ட நிலையில் சடலம் இருப்பதால், கொலை செய்யப்பட்டு அதன் பின்பு சடலம் ஆற்றில் வீசப்பட்டு இருக்கலாம் என்றும், கொலை செய்யப்பட்டவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆற்றில் மீட்கப்பட்ட சடலத்தின் தோலுரிந்த நிலையில் இருப்பதால் உடலிலும் அடையாளம் கண்டறிய முடியாத நிலை உள்ளது. அதில் இரு கைகள், ஒரு கால் மற்றும் அழுகிய நிலையில் தலை என 2 கிலோ மீட்டர் சுற்றளவில் அடுத்தடுத்து மீட்கப்பட்டது. முகம் அழுகிய நிலையில் இருப்பதால் அடையாளம் கண்டறிய முடியாத நிலை உள்ளது 

முன்விரோதம் காரணமாக இறந்த நபரை அரிவாளால் வெட்டி கொலை செய்து தலையை துண்டித்து விட்டு உடலை ஆற்றில் வீசி சென்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இறந்த நபரின் மற்றோரு கால் வேறு எங்கும் வீசப்பட்டுள்ளதா? என்று போலீசார் தேடி வருகிறார்கள். வேறு எங்கேயோ வைத்து கொலை செய்துவிட்டு போலீசாரை திசை திருப்புவதற்காக உடலை பவானி ஆற்றில் வீசி இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News