பவானி அருகே மளிகைக்கடையிலிருந்து 7 கிலோ ஹான்ஸ், குட்கா பறிமுதல்

Erode News Tamil- பவானி அருகே மளிகைக்கடையில், 7 கிலோ ஹான்ஸ் , குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடையின் உரிமையாளரை கைது செய்தனர்.

Update: 2022-06-01 03:30 GMT

கைது செய்யப்பட்ட முருகன்

Erode News Tamil - ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள சித்தார், மேட்டூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கசாமி மகன் முருகன் (49). இவரது மளிகைக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதன்பேரில், சித்தாரில் உள்ள மளிகைக் கடையில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ் - குட்கா புகையிலைப் பொருட்களை கடையின் பின்புறம் உள்ள ரோடு பகுதியில் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சுமார் 7 கிலோ குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார் முருகனைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News