காளிங்கராயன்பாளையத்தில் மது விற்பனை செய்தவர் கைது
சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட காளிங்கராயன் பாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த காளிங்கராயன்பாளையத்தில் சித்தோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த பட்டதரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த ரவி (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.