பெருந்துறை அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது

Erode News- ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தவரை போலீசார் நேற்று (23ம் தேதி) கைது செய்தனர்.

Update: 2024-08-24 09:45 GMT

Erode News- கைது செய்யப்பட்ட இளங்கோவையும், பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டதையும் படத்தில் காணலாம்.

Erode News, Erode News Today- பெருந்துறை அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தவரை போலீசார் நேற்று (23ம் தேதி) கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பட்டகாரன்பாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் வி.மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோ என்கிற சண்முகம் (வயது 35). இவர், வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக பெருந்துறை அ கிராம நிர்வாக அலுவலர் ரதிபிரியாவிற்கு தகவல் கிடைத்தது. 

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பெருந்துறை போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில், போலீசார் இளங்கோ வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, பட்டாசு தயாரிப்பதற்கான வெடிபொருட்களை வைத்து இளங்கோ சட்டவிரோதமாக வான வேடிக்கை பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து, போலீசார் இளங்கோவை கைது செய்தனர். பின்னர், அவரிடம் இருந்து களிமண், 7.800 கிராம் பாஸ்பரஸ், 3.250 கிராம் அலுமினிய பவுடர், வெள்ளை உப்பு 2 கிலோ, 2.250 கிராம் சரடு வெடி, தகரத்தினலான வான கூடு 20, இரும்பு அவுட் பைப், இரும்பு எடை நியாய தரசு, மருத்துகள் நிரப்பப்படாத காலி கூடு, பேப்பர் பசை போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட இளங்கோ மீது ஏற்கனவே திங்களூர் காவல் நிலையத்தில் வெடிபொருள் சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News