கோபி அருகே அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

Erode news- ஈரோடு மாவட்டம் கோபி அருகே அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-20 12:15 GMT

Erode news- கைது செய்யப்பட்ட 4 பேரை படத்தில் காணலாம்.

Erode news, Erode news today- கோபி அருகே அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பங்களாப்புதூர் அருகே உள்ள புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி பிள்ளையார் கோவில் வீதியில் அரசு புறம்போக்கு நிலத்தை 7 பேர் ஆக்கிரமித்து உள்ளதாக தெரிகிறது.

அதை அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் கோபி மண்டல துணை தாசில்தார் இலக்கிய செல்வம் தலைமையில் வாணிப்புத்தூர் நில வருவாய் ஆய்வாளர் சக்திவேல், புஞ்சை துறையம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் நடராஜ் ஆகியோர் சென்றனர்.

அப்போது, பங்களாப்புதூர் அண்ணா நகரில் வசித்து வரும் மதன்குமார் (வயது 47) பங்களாப்புதூரை சேர்ந்த ரவி (வயது 60), நாகராஜ் (வயது 44), அசோக் (வயது 47), பவுனாள் மற்றும் சிலர் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இதுகுறித்து, வாணிப்புத்தூர் நில வருவாய் ஆய்வாளர் சக்தி வேல் பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்குமார், ரவி, நாகராஜ், அசோக் ஆகிய 4 பேரை கைது கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், தலைமறைவாக உள்ள பவுனாளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News