பிளஸ்-2 தேர்வு முடிவு: ஈரோடு மாவட்டத்தில் 96.98 சதவீதம் பேர் தேர்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் 96.98 சதவீதம் மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.;

Update: 2023-05-08 14:45 GMT

பைல் படம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற்றன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில், பிளஸ்-2 தேர்வை தனியார் மற்றும் அரசு பள்ளிகள் பயிலும் 10,753 மாணவர்கள், 12,170 மாணவிகள் என மொத்தம் 22,923 பேர் எழுதினர். இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 முடிவுகள் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டார்.

இதில், ஈரோடு மாவட்டத்தில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் 10,353 பேரும், மாணவிகள் 11,868 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 22,231 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 96.28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 97.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

அரசு பள்ளிகளில் 5,190 மாணவர்களும் 6,726 மாணவிகளும் என மொத்தம் 11,916 பேர் தேர்வு எழுதியதில் மாணவர்கள் 4,836 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். மாணவிகள் 6,452 தேர்ச்சி அடைந்து உள்ளனர். மொத்தம் 11,288 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 94.73 சதவீத தேர்ச்சி ஆகும்.

Tags:    

Similar News