கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு
பழுதடைந்த சாலையை சீரமைத்துக் கொடுக்க வேண்டி கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு அளித்தனர்.
பழுதடைந்த சாலையை சீரமைத்துக் கொடுக்க வேண்டி கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு அளித்தனர்.
பழுதடைந்த சாலையை சீரமைத்துக் கொடுக்க வேண்டி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் கொண்டப்பநாயக்கன்பாளையம் தெற்கு தோட்ட சாலையானது சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது ஆகும். இந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டி அந்தப் பகுதி விவசாயிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கே.என்.பாளையம் பேரூராட்சி அலுவலகத்திலும் பலமுறை மனு கொடுத்துள்ளனர்.
தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தில் முறையிட்டனர். கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதற் கட்டமாக மனு கொடுப்பது, அதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, முதற்கட்டமாக கே.என்.பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.
அப்போது, அமைப்புச் செயலாளர்கள் ஜோதி அருணாச்சலம், சத்தியமங்கலம் நகரச் செயலாளர் குபேந்திரன், சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் சண்முகசுந்தரம், சத்தியமங்கலம் ஒன்றிய அவை தலைவர் சோமசுந்தரம் உட்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.