வெள்ளக்காடான பெருந்துறை: முழங்கால் வரை தேங்கிய நீரால் தத்தளித்த மக்கள்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முழங்கால் அளவிற்கு தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.;

Update: 2023-09-25 15:27 GMT

பெருந்துறை பழைய பேருந்து நிலைய பகுதியில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி நின்றது.

பெருந்துறையில் முழங்கால் அளவிற்கு தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக, மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும், ஒரு சில இடங்களில், கனமழையும், பல இடங்களில் லேசாகவும் பெய்து வருகிறது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து, குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதனால், மக்கள் நிம்மதி அடைகின்றனர். 


இந்நிலையில், திங்கட்கிழமை (செப்.25) இன்று வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதையடுத்து,  மாலையில் சுமார் 5 மணியளவில் மழை பெய்யத் துவங்கியது. குறிப்பாக, பெருந்துறை பகுதியில் சுமார் 1 மணி நேரமாக கனமழை பெய்தது. இதனால் பணிக்கு சென்று மாலை நேரம் வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் சாலைகளில் நகர முடியாமல் முடியாமல் தத்தளித்தனர்.


மேலும், தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். பெருந்துறை பழைய பேருந்து நிலைய பகுதியில் மழை நீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நின்றதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். பெண்கள், நடந்து செல்வோர் முழங்கால் வரை தேங்கிய மழைநீரில் முகம் சுழித்தவாறு சிரமத்துடன் நடந்து சென்றனர். 

Tags:    

Similar News