ஈரோட்டில் வரும் பிப்.27 ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்
ஈரோட்டில் வரும் பிப்ரவரி 27ம் தேதி ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்
ஈரோட்டில் வரும் பிப்ரவரி 27ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27ம் தேதியன்று (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளதென மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களின் ஒய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் (தரைதளம்) எதிர்வரும் 27ம் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில், நடைபெற உள்ள இக்குறைதீர்க்கும் கூட்டத்தில், சென்னை, நிதித்துறை ஓய்வூதிய இயக்குநர் பங்கேற்க உள்ளார்.
எனவே,ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் தங்களது ஓய்வூதிய பலன்கள் குறித்து ஏதேனும் குறைகள் இருப்பின் தங்களது முறையீட்டு மனுக்களை இரண்டு பிரதிகளுடன் 20ம் தேதி (செவ்வாய்கிழமை) மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக மூன்றாம் தளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்குகள்) நேரிலோ அல்லது எச் பிரிவில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். இந்த வாய்ப்பினை ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.