ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: துணை ராணுவத்தினர் அணிவகுப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவத்தினர் கிழக்கு தொகுதி முழுவதும் அணிவகுப்பு மரியாதையில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-11 14:30 GMT

ஈரோடு இடைத்தேர்தலை ஒட்டி துணை ராணுவ அணிவகுப்பு.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் காலமானார். இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக அறிவித்ததை அடுத்து பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேர்தலில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் போட்டியிடுகிறார்.

அதேபோல் அதிமுக சார்பில் அதே தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். மேலும் தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் என பலர் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் இன்று காலை துணை ராணுவம் வரவழைக்கப்பட்டு ஈரோடு ராஜாஜிபுரத்தில் துணை ராணுவ அணிவகுப்பு தொடங்கி கிருஷ்ணம்பாளையம், திருநகர் காலனி, காவேரி ரோடு, அக்ரகாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் மற்றும் தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவு, சிறப்பு பிரிவு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. ஈரோடு ராஜாஜிபுரத்தில் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் 64 மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல்துறையினர், 180 காவல்துறை சிறப்பு போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News