கோபி அருகே 100 நாள் வேலை கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

ஈரோடு மாவட்டம் கோபி அருகே 100 நாள் வேலை கேட்டு ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-07-01 10:15 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை படத்தில் காணலாம்.

கோபி அருகே 100 நாள் வேலை கேட்டு ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கள்ளிப்பட்டி அருகேயுள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை வேண்டி சுமார் 200 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தையும் இன்று (1ம் தேதி) காலை திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது, கணக்கம்பாளையம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலையில் பணி செய்து வந்தோம். கடந்த சில தினங்களாக வேலை இல்லாததால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவரிடமும் தொடர்ந்து வேலை கேட்டு வந்தோம்.

ஆனால், கணக்கம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் 25 பேருக்கு மட்டும் நூறு நாள் வேலை கொடுப்பதாக கூறுகின்றனர். எனவே அரசும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் நூறு நாள் வேலை எங்களுக்கும் கிடைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News