மோடி, அமித்ஷா தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்., மாநில செய்தி தொடர்பாளர் கண்டனம்

Erode news- தமிழகத்திற்கு வருகை தரும் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.எஸ்.கோதண்டன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-05-30 10:30 GMT

Erode news- அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் கே.எஸ்.கோதண்டன்.

Erode news, Erode news today- தமிழகத்திற்கு வருகை தரும் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.எஸ்.கோதண்டன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.எஸ்.கோதண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்நாட்டைச் சார்ந்த வி.கே.பாண்டியனுக்கு ஒடிஷா மக்கள் வாக்களிக்க கூடாது என்று கூறிய அமித்ஷாவும், மோடியும் தமிழ்நாட்டிற்கு வரலாமா.?.

ஒடிஷாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது அரசியல் வாரிசாக தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனை அறிவித்ததை தொடர்ந்து, மோடியும், அமித்ஷாவும் தமிழர்கள் அனைவரையும் திருடர்கள் போலவும், ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் ஆலயத்தின் சொத்துக்களை தமிழர்கள் கொள்ளை அடித்து விடுவார்கள் என்றும் அவதூறாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியுள்ளனர்.

இவ்வாறு தமிழ் மக்களை அவதூறாக பேசிய மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரும் இன்று எதற்காக தமிழகத்திற்கு வருகின்றார்கள்.  இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News