ஈரோடு ரயில் நிலையத்தில் 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' மருந்தகம் திறப்பு

Erode news- ஈரோடு ரயில் நிலையத்தில் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஜன் அவுஷதி கேந்திரா பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகத்தினை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.;

Update: 2024-03-12 20:30 GMT

Erode news- 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' திட்டத்தில் ஈரோடு ரயில் நிலையத்தில் மருந்தகம் திறக்கப்பட்டது.

Erode news, Erode news today- ஈரோடு ரயில் நிலையத்தில் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஜன் அவுஷதி கேந்திரா பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகத்தினை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பிரதமர் மோடியின் மோடி அரசின் உத்தரவாதம் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்காக ரயில்வே துறையை நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ஒரு ரயில் நிலையத்தில் ஒரு தயாரிப்பு விற்பனையகம் திறக்கப்படுகின்றது. அதன்படி, சேலம் ரயில்வே கோட்டத்திலேயே முதல் முறையாக ஈரோடு ரயில் நிலையத்தில் பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகம் துவக்க விழா செவ்வாய்க்கிழமை (நேற்று) நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, மத்திய பாஜக அரசின் சார்பில் ரயில்வே துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்த காணொளி காட்சிகள் ஔிபரப்பப்பட்டது.

பின்னர், ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை மற்றும் ரயில் நிலையத்தின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள பிரதமரின் மக்கள் மருந்தகத்தினை ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் வேதானந்தம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News