ஈரோட்டில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா
ஈரோட்டில் ஆடி மாத 4வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, இந்து அன்னையர் முன்னணி சார்பில், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு ஊர்வலம் நடந்தது.
ஈரோட்டில் ஆடி மாத 4வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, இந்து அன்னையர் முன்னணி சார்பில், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு ஊர்வலம் இன்று (9ம் தேதி) நடந்தது.
ஈரோட்டில் இந்து அன்னையர் முன்னணி சார்பில், ஆண்டு தோறும் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, ஆடி மாதம் நடக்கும். அதன்படி, ஆடி மாத 4வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அன்னையர் முன்னணி சார்பில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா ஊர்வலம் இன்று நடந்தது.
ஈரோடு காரைவாய்க்கால் சின்ன மாரியம்மன் கோயிலில் இருந்து 250க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு கள்ளுக்கடைமேடு ஸ்ரீ இராமபக்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றடைந்தனர்.
இந்து முன்னணி ஈரோடு மாவட்ட தலைவர் ப.ஜெகதீசன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் க.கார்த்தி முன்னிலையில் நடைபெற்றது. இதில், இந்து முன்னணி மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் சிறப்புரையாற்றினார். மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
இந்த ஊர்வலத்தை இந்து அன்னையர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பா.ரமேஷ், இந்து அன்னையர் முன்னணி நகரத் தலைவி தா.ஜெயமணி, நகர பொதுச்செயலாளர் வே.பூர்ணிமா ஆகியோர் முன் நின்று வழி நடத்தினர். இதில், பொதுமக்கள் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.