கரும்பு டன்னுக்கு ரூ.5,500 வழங்க வலியுறுத்தி அக்.15ல் சென்னை கோட்டை முற்றுகை

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,500 வழங்கிட வலியுறுத்தி வரும் அக்,15ல் சென்னை கோட்டையை முற்றுகையிட சத்தியமங்கலத்தில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

Update: 2024-09-22 04:15 GMT

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை சங்கத்தின் சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.

Erode Live Updates, Erode Today News, Erode News - கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,500 வழங்கிட வலியுறுத்தி வரும் அக்,15ல் சென்னை கோட்டையை முற்றுகையிட சத்தியமங்கலத்தில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை சங்கத்தின் சிறப்பு ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சங்க மாநில பொது செயலாளர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் முனுசாமி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.


கூட்டத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ,5,500 வழங்க கோரி வரும் அக்டோபர் 15ம் தேதி சென்னை கோட்டையை 2500க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, 2004ம் ஆண்டு முதல் 2009 வரை நான்கு ஆண்டுகளுக்கு அரவை பருவத்திற்கு லாபத்தில் பங்கு தொகை தரக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இக்கூட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News