ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்காக 130 டன் விதை கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-06-02 16:36 GMT

விதைகள்(பைல் படம்)

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்காக 130 டன் விதை கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஈரோடு மாவட்ட வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:- ஈரோடு மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை 733.44 மில்லி மீட்டராகும். கடந்த 30ம் தேதி வரை, 229.84 மில்லி மீட்டர் மழை பதி வாகி உள்ளது. பவானிசாகர் அணை நீர் மட்டம் 81.80 அடியாகவும், 16.65 டி.எம். சி., நீர் இருப்பும் உள்ளது. பருவமழை துவங்கும் போது நீர் இருப்பு உயர்வதுடன், பாசனப்பகுதிக்கு தண்ணீர் திறப்பு குறைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

இதனை கருத்தில் கொண்டு தற்போது, 88.845 டன் நெல் விதை, 11.2 டன் சிறு தானியங்கள், 10.161 டன் பயறு வகைகள், எண் ணெய் வித்துக்கள், 19.679 என 130 டன் விதைகள் கையிருப்பில் உள்ளது. ரசாயன உரங்களான யூரியா 5,364 டன், டி.ஏ.பி., 3,078 டன், பொட்டாஷ் 1,156 டன், காம்ப்ளக்ஸ் 12,080 டன் என இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நடப்பு பருவத்துக்கு தேவையான இடுபொருட்கள், விதைகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன.

மேலும் தரிசு நிலங்களில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறையினர் ஆய்வு செய்து, ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவி பயிர் சாகுபடிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கூறினர்.

விதை நெல்  மற்றும் பயறு வகைகள் இருப்பின் அளவை கருத்தில் கொண்டு விவசாயிகள் அதனை முறையாக பெற்று பயன் அடையும்படியும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News