கோபி அருகே கல் குவாரியை அளவீடு செய்ய முடியாமல் திரும்பி சென்ற அதிகாரிகள்

Erode news- ஈரோடு மாவட்டம் கோபி அருகே தற்காலிக தடை வாங்கியதன் காரணமாக கல் குவாரியை அளவீடு செய்ய முடியாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

Update: 2024-07-04 10:15 GMT

Erode news- கல்குவாரியை அளவீடு செய்ய நீதிமன்ற தற்காலிக தடைக்கான நகலை கல்குவாரி உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் வழங்கிய போது எடுத்த படம்.

Erode news, Erode news today- கோபி அருகே தற்காலிக தடை வாங்கியதன் காரணமாக கல் குவாரியை அளவீடு செய்ய முடியாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் கொங்கர்பாளையம் ஊராட்சி கவுண்டம்பாளையம் கிராமத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கொங்கணகிரி முருகன் மற்றும் மாதேஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது .

இதில், மாதேஸ்வரன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குவாரி உரிமையாளர்கள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உண்ணாவிரத போராட்டம் இருக்க போவதாக விவசாயிகள் அடங்கிய போராட்ட குழுவினர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகரிடம் கடந்த 2ம் தேதி மனு அளித்தனர்.

இந்நிலையில், நேற்று (3ம் தேதி) இதுகுறித்து கோபி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கண்ணப்பன் தலைமையில் அதிகாரிகள் போராட்ட குழுவினரை அழைத்து பேசினர். பேச்சுவார்த்தையின் முடிவில் நாளை (4ம் தேதி) குவாரியை நில அளவு செய்யப் போவதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டக் குழுவினர் உண்ணாவிரத்தை கைவிடுவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று (4ம் தேதி) வருவாய் துறை, அறநிலைய துறை, பொதுப்பணி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கோபி வருவாய் கோட்டாட்சியர் கண்ணப்பன், சத்தியமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் அளவீடு மற்றும் ஆய்வு செய்வதற்காக தனியார் கல்குவாரி இருக்கும் இடத்திற்கு சென்றனர்.

அப்போது, நாங்கள் முறையான அனுமதி பெற்று தான் குவாரி நடத்தி வருகிறோம். மேலும் அளவீடு செய்வது குறித்து நீதிமன்றத்தில் தற்காலிக தடை வாங்கியுள்ளதாக அதிகாரிகளிடம் கல்குவாரி உரிமையாளர்கள் தெரிவித்தவினர். அதற்கான நகலையும் அவர்களிடம் ஒப்படைத்தனர். இதனால், அதிகாரிகள் அளவீடு செய்ய முடியாமல் சென்றனர்.

Tags:    

Similar News