ஈரோட்டில் தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆய்வு

Erode news- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக மையத்தின் செயல்பாடுகளை தேர்தல் செலவினப் பார்வையாளர் லட்சுமிநாராயணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2024-03-21 11:15 GMT

Erode news- ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை தேர்தல் செலவினப் பார்வையாளர் லட்சுமிநாராயணா பார்வையிட்டு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக மையத்தின் செயல்பாடுகளை தேர்தல் செலவினப் பார்வையாளர் லட்சுமிநாராயணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஈரோடு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் செலவுகளை கண்காணிக்க ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் மற்றும் காங்கயம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக லட்சுமி நாராயணா நியமிக்கப்பட்டுள்ளனர்.


அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் செலவின பார்வையாளர் லட்சுமி நாராயணா துறை சார்ந்த உயர் அலுவலர்களுடன் தேர்தல் செலவின பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, வீடியோ கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ பார்வைக் குழுக்கள், கணக்குகள் குழுக்கள் ஆகிய குழுக்களுக்கு நியமனம் செய்யப்பட்ட அரசு பணியாளர்களுக்கு தேர்தல் செலவின கணக்கு சம்பந்தமாக தேர்தல் ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்ட வழிமுறைகள் முறையாக பின்பற்றி பணிபுரிய வேண்டும் எனவும், அனைத்து குழுக்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை எவ்வித தொய்வின்றி நடுநிலையோடும், தேர்தல் சுமூகமாக நடைபெற நேர்மையாகவும் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.


முன்னதாக, உதவி செலவின பார்வையாளர்களுடன் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் கட்டுபாட்டு அறை ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மணீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய் குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் குருநாதன் (கணக்குகள்), ரகுநாதன் (தேர்தல்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News