ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சி அளவில் நாளை ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி

ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சி அளவில் 225 ஊராட்சிகளில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நாளை (12ம் தேதி) நடைபெறவுள்ளது.

Update: 2024-09-11 13:30 GMT

நாளை ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி.

ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சி அளவில் 225 ஊராட்சிகளில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நாளை (12ம் தேதி) நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் ஆகியோர்களுக்கு போதிய ஊட்டச்சத்து மற்றும் விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இரத்த சோகையினால் பாதிக்கப்படுகின்றனர்.

இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் மூலம் உணவு, ஊட்டச்சத்து, உடல் நலம், தன்சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல் (எப்என்ஹெச்டபல்யூ) திட்டத்தின் மூலம் "இரத்தசோகை இல்லாத கிராமம்" குறித்த சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா" நடத்திடவும், பாரம்பரிய உணவு வகைகளின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் கிராம ஊராட்சி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட உள்ளது.

அதனடிப்படையில், ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சி அளவில் 225 ஊராட்சிகளில் நாளை (12ம் தேதி) வியாழக்கிழமை நடக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.300ம், இரண்டாம் பரிசாக ரூ.200ம், மூன்றாம் பரிசாக ரூ.100ம் வழங்கப்படவுள்ளது. ஊராட்சி அளவில் முதல் பரிசு பெறும் சுய உதவி குழுக்கள் வட்டாரத்திலும், வட்டார அளவில் முதல் பரிசு பெறும் சுய உதவி குழுக்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் சுய உதவி குழுக்கள் மாநில அளவிலும் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள தகுதியானவர்கள்.

எனவே, ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து சுய உதவிக் குழுக்களும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா" போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News