ஈரோடு மாவட்டத்தில் நாளை (4ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில், நாளை (4ம் தேதி) மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் நாளை (4ம் தேதி) மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (4ம் தேதி) வியாழக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே மின்சார தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் தங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பெருந்துறை அருகே உள்ள சென்னிமலை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த சென்னிமலை நகர் பகுதி முழுவதும்,பூங்கா நகர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல் பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சி பாளையம், திப்பம் பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், இராமலிங்கபுரம் ஓரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவப்பட்டி மற்றும் முருங்கத்தொழுவு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.