ஈரோடு மாவட்டத்தில் நாளை (பிப்.3) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

Erode District Power Shutdown ஈரோடு மாவட்டத்தில், நாளை (பிப்.3) சனிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.;

Update: 2024-02-02 03:00 GMT

மாதாந்திர பராமரிப்பு பணி (கோப்புப் படம்).

Erode District Power Shutdown

ஈரோடு மாவட்டத்தில், நாளை (பிப்.3) சனிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (பிப்ரவரி 3) சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

பெருந்துறை திங்களூர் துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-  பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டண் பாளையம், சுங்ககாரன்பாளையம், செல்லப்பம்பாளையம், சீனாபுரம், மேட்டூர், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், சி.எம்.பாளையம், எல்லப்பாளையம், கோமையன் வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News