கோபிசெட்டிபாளையம் அருகே வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோபிசெட்டிபாளையம் அருகே வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-07-01 05:30 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாளபாளையம் பிரிவு பகுதியில் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலையில் ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த நூற்பாலையில் பணியாற்றிய ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி கசரப் என்பவர் காணாமல் போனார். 


இதுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே காணாமல் போன வடமாநில தொழிலாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் நூற்பாலை நிர்வாகம் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக்கூறி வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News