ஈரோட்டில் இருவேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
ஈரோட்டில் இருவேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று (30ம் தேதி) அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோட்டில் இருவேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று (30ம் தேதி) அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ’ஹிஜ்புர் தகர்’ இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகாமை (என்ஐஏ) இன்று (ஜூன் 30) காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
இதில் ஒரு பகுதியாக, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அசோக்நகர் ஆறாவது தெருவில் உள்ள சர்புதீன் என்பவர் வீட்டில் அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், சூரம்பட்டி அருகில் உள்ள கருப்பணசாமி கோவில் வீதி எஸ்.கே.சி சாலை அருகில் நகரில் உள்ள முகமது ஈசாக் என்பவர் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு தொடர்பில் உள்ளாரா என்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக கூறப்படும் நிலையில், திருப்பூரில் இருந்து பத்துக்கு மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் மூன்று கார்களில் வந்து ஈரோட்டில் இரண்டு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். என்ஐஏ அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.