ஈரோட்டில் என்ஐஏ சோதனை நிறைவு: செல்போன்கள், பென்டிரைவ் பறிமுதல்

ஈரோட்டில் நடைபெற்று வந்த என்ஐஏ அதிகாரிகள் சோதனை நிறைவடைந்தது. இதில், செல்போன்கள் மற்றும் பென்டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2024-06-30 10:55 GMT

ஈரோடு பெரியார் நகர் அருகே உள்ள கருப்பண்ணசாமி கோவில் வீதியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்த வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஈரோட்டில் நடைபெற்று வந்த என்ஐஏ அதிகாரிகள் சோதனை நிறைவடைந்தது. இதில், செல்போன்கள் மற்றும் பென்ட்ரைவ் பறிமுதல் செய்யப்பட்டன. 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று (30ம் தேதி) தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒரு பகுதியாக ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட செட்டிப்பாளையம் அருகே அசோக் நகர் ஆறாவது தெருவில் உள்ள சர்புதீன் வீட்டிலும், பெரியார் நகரில் அருகே எஸ்.கே.சி சாலையில் உள்ள முகமது ஈசாக் என்பவர் வீட்டிலும் என்ஐஎ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக கூறப்பட்ட நிலையில், திருப்பூரில் இருந்து மூன்று கார்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் ஈரோட்டில் இரண்டு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையின் நிறைவில், சோதனையில் நடத்தப்பட்டவர்களிடம் இருந்து செல்போன், டாக்குமெண்ட், முகமது ஈசாக் இடமிருந்து செல்போன், இரண்டு பென்டிரைவ் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், சர்புதீன் என்பவரை வருகின்ற 4ம் தேதியும், முகமது ஈசாக் என்பவரை வருகின்ற 2ம் தேதி, சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அழைத்துள்ளனர்.

Tags:    

Similar News