வேளாளர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா

Erode news- ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா நடைபெற்றது.;

Update: 2024-03-12 19:45 GMT

Erode news- நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழாவில், வேளாளர் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் சந்திரசேகர் பள்ளி மாணவிக்கு பரிசு வழங்கிய போது எடுத்த படம்.

Erode news, Erode news today- வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற சிறப்பு முகாமின் நிறைவு விழா ஈரோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கூரப்பாளையத்தில் நடைபெற்றது.

இம்முகாமில் மரக்கன்று நடுதல், கோவில் வளாகம் சுத்தம் செய்தல், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு, மாசுக் கட்டுப்பாடு விழிப்புணர்வு, பள்ளி சுற்றுச் சுவர் சுத்தம் செய்து வர்ணம் பூசுதல், பள்ளி சத்துணவுக் கூடம் வர்ணம் பூசுதல், இலவச பொது மருத்துவ முகாம், இலவச கண் சிகிச்சை முகாம், பள்ளி குழந்தைகளுக்கு கணினி மற்றும் ஆங்கிலப் பயிற்சி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விழாவிற்கு, வேளாளர் கல்வி அறக்கட்டளையின் செயலாளரும் , தாளாளருமான சந்திரசேகர் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஜெயராமன் மற்றும் புலமுதல்வர் பேராசிரியர் ஜெயச்சந்தர் ஆகியோர் சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளிக் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்தனர்.

முகாமில் பள்ளித் தலைமை ஆசிரியை மீனா வாழ்த்துரை வழங்கினார். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கோவிந்தராஜன் மற்றும் ஹரி பிரசாத் ஆகியோர் செய்திருந்தனர். விழா முடிவில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கோவிந்தராஜன் நன்றியுரை வழங்கினார்.

இவ்விழாவில் ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News