ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம்
ஈரோடு ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் செவ்வாய்க்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது.;
தேசிய விளையாட்டு தினம் ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் கொண்டாடப்பட்டது.
ஈரோடு ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் செவ்வாய்க்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதி தேசிய விளையாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. வரலாற்றில் மிகச்சிறந்த ஆக்கி வீரர்களில் ஒருவரான மேஜர் தயான் சந்தின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேசிய விளையாட்டு தினத்தின் பன்னிரண்டாவது ஆண்டு விழா இன்று (ஆகஸ்ட் 29) செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஈரோடு - பெருந்துறை சாலையில் உள்ள ஈங்கூர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இதில், மேஜர் தியான் சந்தின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதனையடுத்து, தினமும் உடல் ஆரோக்கியத்திற்காக நேரம் செலவிட உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராமன் விழா உரையாற்றி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் மற்றும் பேராசிரியர்கள் மேற்கொண்டனர்.